பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

125

நீங்களும் அவன் தொடையில் கயிறு திரித்துக் கொண்டே இருக்க முடியாது. என்றைக்காவது தூங்கிக் கொண்டிருப்பவன் விழிப்பான்; நீங்கள் திரித்துக் கொண்டிருக்கிற கயிற்றையே உங்கள் கழுத்தில் போட்டு இறுக்குவான்; தூக்கில் தொங்கவிடுவான். அப்படி ஒரு நிலை வரத்தான் போகிறது. எச்சரிக்கையாய் இருங்கள். நாளைக்கு நீங்கள் போய்ச் சொல்லுங்கள் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

நாளைக்கு நடக்க இருக்கிற மாநாட்டிலே தீர்மானத்தைக் கொண்டுவரப் போகிறேன். செயல் திட்டத்தையும் அறிவிக்கப் போகிறேன். வேடிக்கையாவது பார்த்துவிட்டுப் போங்கள். நாங்கள் ஐந்தாறு பேர் இருக்கிறோம். ஐந்தாறே பேர்தாம்! எந்த இயக்கமும், எந்த இந்திராவும் எங்களை அசைக்க முடியாது. பதவிக்கோ பட்டத்திற்கோ நாங்கள் விரும்பியவர்கள் அல்லர். கனவில்கூடக் கண்டவர்கள் அல்லர்.

எனவே , மொழிதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. மொழி கொஞ்சங் கொஞ்சமாக அழிந்தது; இனவுணர்ச்சியும் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைக்கப் பெற்றது. நம்முடைய பொருளியல், அரசியல் அமைப்புகள் கொஞ்சங் கொஞ்சமாகச் சிதைக்கப் பெற்றன. கோயில்கள் கட்டியவன் பார்ப்பானில்லை; தமிழன்தான். களப்பிரர் காலத்தில்தான் வழிபாட்டு முறை வந்தது. வடமொழி மந்திரங்களைச் சொல்லச் சொன்னார்கள். அதற்குச் சட்டமும் செய்யப் பெற்றது. தமிழன் தான் முன்னோடி பார்ப்பான் இடையூறாக இல்லை. நம்மை நாமே திருத்திக்கொள்ள வேண்டும். ஒருமுறை கோ.து. (நாயுடு) அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில் நாம் அடிமை நாட்டிலே தானே இருக்கிறோம். என்றார்கள், ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றேன் இல்லை அப்படித்தானே பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்’ என்றார்கள். ‘நீங்கள் வேண்டுமானால் அடிமையாக இருக்கலாம்; நாங்கள் அடிமைகள் அல்லர். நாங்கள். அவன் எழுதி வைத்ததை நம்பவில்லை’ என்றேன் அவரிடமிருக்கும் செல்வத்திற்குக் கொஞ்சம் இப்படிக் காட்டினாரென்றால் என்னென்ன வேலை நடக்கும் தெரியுமா? தமிழ் நாட்டிலிருக்கும் செல்வர்களில் ஒரு சிலர் நேரடியாகக் கூட வேண்டாம்; மறைமுகமாகக் கொஞ்சம் உதவினாலே போதும், அவர்கள் வியக்கும்படிச் செயல்கள் நடக்கும்.

மொழி விடுதலைதான் அடிப்படையானது என்று சொன்னேன். அதில் நாம் வெற்றி பெறவில்லை. எனவே நம் இயக்கமும் வெற்றி பெறவில்லை. இவ்வாண்டு 5-ஆம் வகுப்பு வரை பாடத் திட்டத்தை அரசினர் மாற்றியிருக்கின்றனர். நன்றாகப் படம்