பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

169

முழக்கங்களுடன், ஆரவாரமிக்க சாலைகளின் வழியாகப் பகல் 12 மணியளவில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை வழியாகப் பெரியார் சிலைக் கருகில் ஒன்று கூடிக் கொள்கை முழக்கத்துடன் மாநாட்டு மணல் திடல் நோக்கிச் சென்று முடிவெடுத்துக் கலையும்.

அன்று மாலை நடைபெறும் மாநாட்டுக் கூட்டத்தில் மாநாட்டு அமைப்பாளர் பெருஞ்சித்திரனாரும், முரசொலி அடியாரும் வேறு சில அரசியல் கட்சி விடுதலை வேங்கைகளும் கொள்கைகள் முழக்குவர். இறுதியில் மாநாட்டின் ஒரே தீர்மானத்துடனும், அடுத்து திட்ட அறிவிப்புடனும் மாநாடு முடிவுறும்.

எனவே,

தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அவ் விடுதலை மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அரிமா மறவர்களும், விடுதலைக் களிறுகளும், கொள்கைக்கோளரிகளும், வல்லுணர்வு வேங்கைகளும், இன்றே தலைநகரை நோக்கிப் புறப்பட அணியமாகட்டும்!

அடுத்த தலைமுறைக்கு உரிமைப் பட்டயம் தீட்டட்டும்! எழுச்சி பெறும் எரி முழக்க நாள் சூலை 13, இடம், சென்னை கடற்கரை! மாநாட்டை மறவாதீர்கள்! பிற தொடர்புகளை மறவுங்கள்! புறப்படுங்கள் தலைநகரை நோக்கி!!

- தென்மொழி, சுவடி 12 ஓலை 8. 1975