பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

189

தமிழீழத்திலும் வாழ்ந்து வரும் தமிழர்களே! இரண்டு நாடுகளிலுமே அவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் தோன்றியதும் இவ்விரு நாடுகளையும் உள்ளடக்கிய இலெமூரியா என்னும் இந்நிலப்பகுதியிலேயே ஆகும்! எனவே அவர்களின் இனவுரிமைத் தாக்கத்தையும் வாழ்வுரிமைச் சிக்கலையும் முன்வைத்து ஆட்சியுரிமைக் கோரிக்கைக்கு எழுச்சிக் குரல் கொடுப்பார்களேயானால் அவர்களைத் தடுத்து நிறுத்திவிடவும், அவர்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிடவும் உலகில் இன்றுள்ள எந்த ஆற்றலாலும் இயலாது. அந்த அளவுக்கு இந் நிலவுருண்டைப் பகுதியில் நிலவுரிமை படைத்தவர்கள், அவர்கள்!

தமிழர் வாழ்வுரிமை பெறத் தக்கனவாகிய மேற்கண்ட இரண்டு நாடுகளில், இன்றைய நிலையில் இலங்கை வாழ் தமிழர்களே ஆட்சியுரிமைக்குப் போராடும் வகையில் கிளர்ச்சியுற்றுப் போராடத் தலைப்பட்டுள்ளனர். அவர்களின் தமிழீழத் தனி நாட்டுப் போராட்டம் பல்வேறு அரசியல் உரிமைக்குப் பின்னர் வடிவம் பெற்றதாகும். அது கடந்த முப்பத்தைந்தாண்டுக் காலமாக நடந்து வருவது, அவ்வகையில் இலங்கைத் தமிழினச் சிறுபான்மையரை ஒடுக்கி அடக்கி ஆண்டு கொண்டுள்ள, சிங்களப் பெருபான்மையினம், அங்குள்ள தமிழரை முற்றாக அழிப்பதற்கே திட்டமிட்டுள்ளது என்பதைக் கடந்தகால இன அழிப்புக் கலவரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.

கடந்த சூலை மாதக் கலவரம் இதுவரை அங்கு நேர்ந்த கலவரங்கள் அனைத்துக்கும் கொடுமுடியானது; கொடுமையானது. அரசு படைத்துறை, காவல்துறை, சிங்கள மக்கள் ஆகிய நான்கு ஆற்றல்களும் ஒருமுகமாக அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக நின்று, நேரடியாக அவர்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இவ்வினப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காண இன்று இந்தியா அதில் தலையிட்டுள்ளது. அதன் தலையீடு நல்ல நோக்கத்துடன் அமைந்ததாக, அதன் நடைமுறைகளைக் கொண்டு கணிக்க முடியவில்லை. அதன் தொடக்கமே தமிழீழக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் தமிழீழம் தனியே பிரிந்தாலன்றி, இலங்கையிலுள்ள தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறுவதற்கு வழியே இல்லை; அந்த நம்பிக்கை யெல்லாம் கடந்த கால இனக் கலவரங்களின் வழி முழுதுமாக அழிக்கப்பட்டு விட்டன. தமிழீழக் கோரிக்கையின் வெற்றியில்தான் எதிர்காலத் தமிழினத்தின் வாழ்வு அமைந்து கிடக்கிறது. அடிமையுற்றுக் கிடக்கும்