பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வேண்டும் விடுதலை


 
தமிழினமே ஒன்றுபட்டு இயங்குக!


மிழின விடிவிப்புக்கான காலம் கனிந்துள்ளது. ஆனால் வீணே கழிந்துகொண்டுள்ளது. நம் தேசிய விடுதலைக்குரல் வலிவாக இன்னும் தில்லிக்குப் படவில்லை. தமிழீழ விடுதலைக்கே தில்லி செவிசாய்க்கவில்லை. செவிசாய்க்கும் என்னும் நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் தமிழக விடுதலைக் குரலை அவர்கள் மதிக்கப் போவதே இல்லை இந்தியாவில், அன்றைய நிலையில் அசாம், பஞ்சாப், மிசோரம், நாகாலாந்து, ஒரிசா முதலிய பல மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்கான முயற்சிகளும் முத்தாய்ப்புகளும் தொடங்கிவிட்டன. இந்தியாவிலிருந்து தேசிய இன விடுதலை பெறுவதற்குரிய தகுதி தேவையும் பெற்ற முதல் மாநிலம் தமிழகமே!

ஆனால் இது கண்மூடி அடிமைப்பட்டுக் கிடப்பது பெரிதும் வருந்தத்தக்கது. அனைத்துலகும் ஒன்று எனும் எண்ணம் வேறு; அனைத்துரிமைகளும் பெறவேண்டும் என்னும் கோரிக்கை வேறு. முன்னது பொதுவானது பின்னது சிறப்பானது! மேலும் இந்திய அரசு நமக்குள்ள உரிமைகளை என்றுமே முழுமையாக வழங்கப் போவதில்லை. மாறாக, நம்மினத்தின் தனிச்சிறப்புக் கூறுகளையும் நலன்களையும் ஒன்றுமற்ற பிற காட்டு விலங்காண்டி இனங்களுடன் பங்கு போட்டுக் கொள்ளவே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. நூறை இழந்து ஒன்றைப் பெறுவதே நமக்குப் போதும் என்று கருதிவிடக் கூடாது. இந்திக்கு நூறு கோடி! தமிழுக்கு ஓர கோடி! இந்தியை விட தமிழ் நூறு மடங்கு தாழ்ந்ததா? மூடர்களையும் அடிமைகளையும் தவிர,