பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

வேண்டும் விடுதலை


 
உண்மையான இன முன்னேற்றம்
என்பது உரிமை மீட்பே!


மிழர்கள் இன்றைக்குத் தங்களை ஈடேற்றிக் கொள்ளச் செய்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்தமான முன்னேற்ற முயற்சிகளில், முதலில் செய்ய வேண்டிய தலையாய முயற்சி, தமிழின உரிமை மீட்பு முயற்சியே, என்பது பலவகையான ஆய்வுகளுக் கிடையே தெளியப்பெற்ற உண்மையாகும். எவ்வளவு பெரிய அறிஞரோ, ஆராய்ச்சியாளரோ, சாய்கால் உள்ள தலைவரோ இன்றைக்கு இதை அறியாமையாலோ, அறிந்தோ, மறுத்தாலும் நாளைக்கு இக்கருத்தையே உண்மை என்று ஒப்புக் கொள்ளப் பெறும். காலம் வரத்தான் வரப்போகிறது. கடந்த 25 ஆண்டுக் காலமாக நாம் இதை மிகவும் அழுத்தமும் திருத்தமுமாகவே கூறி வருகிறோம். அன்றைக்கு இதை ஏளனப் படுத்தியவர்கள் இழிவாகப் பேசியவர்கள், எதிர்த்தவர்கள் கூட இன்றைக்கு நேரடியாக இல்லாமற்போனாலும், தங்கள் சாய்காலை இழந்து கொள்ளாத நிலைக்கு இலை மறை காயாகவேனும், பேசியும் எழுதியும் வருவதைக் குமுகாய மாறுபாடுகளை மிகவும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டு வருபவர்கள் கட்டாயம் உணருவார்கள்.

தமிழ்மொழியைப் பற்றியே பேசாதவர்கள் கூட இன்றைக்கு ஆங்காங்கே தனித்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். தமிழ் இனம் என்று பேசாமல் திராவிட இனம் என்று பேசியே எழுதியே வந்தவர்கள், எங்கு எதிர்காலம் தங்களைப்