பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

வேண்டும் விடுதலை

எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். நம் இன மக்களின் மேல் அன்பு பொழிதல் வேண்டும் அக்கறை கொள்ளுதல் வேண்டும். இவ்வினத்தில் உள்ள சாதி வேற்றுமைகளைக் களைந்தெடுப்பதாய் உறுதி பூணுதல் வேண்டும் ; இந்நிலைக்கு முதலில் தங்களிடம் உள்ள சாதியுணர்வைக் களைந்து நீக்குதல் வேண்டும். சாதியற்ற சமனிலைக் குமுகாய உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறெல்லாம் பெரும்பாலார் முயன்றுதான் இவ்வினத் தாழ்ச்சியை நீக்கப் பாடுபடுதல் வேண்டும்.

இனி, அடுத்தபடி, நம்நாட்டின் பற்றை மேலும் மிகுவித்துக் கொள்ளுவது இன்றியமையாதது. நாட்டுப்பற்றுக்கு இனப்பற்று அடிப்படை, நம்முடைய மொழி, நம்முடைய இனம் என்று சொல்லுவதைப் போல் நம்முடைய நாடு என்றும் சொல்வதே இயற்கைக்குப் பொருந்திய உணர்வாகும். மொழியில்லையேல் இனமில்லை; ஓர் இனம் வாழ்கின்ற நிலப்பரப்பே நாடு. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் - தமிழினத்தவர்கள் - வாழும் நிலப்பரப்பு தமிழ்நாடு ஆகும். எனவே நம்நாடு தமிழ்நாடு என்றே உணர்தல் வேண்டும்.

இந்தியாவை நம் நாடாகக் கருத முடியாது. ஆனால் ஒரு காலத்தில் இந்தியா முழுவதம் தமிழர்கள் வாழும் நாடாகத்தான் இருந்தது. காலத்தால் அந்நிலை குறுகி, இப்பொழுதுள்ள நில அளவே தமிழ்நாடு எனப்படும். நிலைக்கு வந்து விட்டது. இதுவும் தமிழினத்தின் கேடுகளால் நேர்ந்த நிலைதான். எனவே இப்பொழுதுள்ள தமிழ்நாட்டை மேலும் நாம் காத்துக் கொள்ளுதல் வேண்டும், இல்லெனின் இதுவும் குறுகிப் போய் ஒன்றுமிலாமல் ஆகித் தமிழினம் நாடற்ற நாடோடி இனமாக ஆகிவிடும். எனவே தான் நாம் நாட்டின் மீதும் பற்றுக் கொண்டு, இந்நிலப்பரப்பைக் கட்டிக் காக்க வேண்டும்.

இப்பொழுதைய நிலையில் தமிழ்நாடு, தில்லி ஆட்சிக்கு அடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது. இன்னும் சொன்னால் அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இந்தியா குடியரசு நாடு என்பதால், நாமும் உரிமை பெற்று வாழ்கிறோம் என்று சொல்வது பொருந்தாது. இனி, அவ்வாறு கூறுவது தவறுமாகும்; உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். நாம் உரிமை பெற்றதாகக் கூறமுடியாது: உரிமை பெற்றிருப்பது உண்மை என்றால், நாம் நம் தாய்மொழியில் கல்வி கற்கவும், கற்றவுடன் அரசுப்பணி செய்யவும் வாய்ப்பிருக்க