பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

55

எப்படி தாம் இழந்த அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குத் தம் நேருக்கு நேரான அரசியல் எதிரியைக் கூட தோளுக்குத் தோளிணைய அணைக்க முற்பட்டாரோ, அப்படியே இங்குள்ள தன்மானத் தமிழர்களும், தாம் பெற்ற அரசியல் அதிகாரத்தைக் காப்பற்றிக் கொள்ள தத்தமக்குள்ள கருத்து வேறுபாடுகளையும் மறந்து, தோளோடு தோளிணைந்து போராடத் தெரிந்தவர்கள் என்று கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

வாழ்க்கை என்பது எப்படி வெறுமையாக இல்லாமல் ஓர் இலக்கு நோக்கிய வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நாம் சொல்லி வருகின்றோமோ, அப்படியே அரசியல் என்பதும் வெறும் பதவிப் பேராட்டமாக இல்லாமல் அறவியலை நோக்கியே போக வேண்டும் என்பதும் நம் கொள்கை. ஆனால் அரசியல் என்றாலே காற்றடித்த பக்கம் சாயும் கயவாளித் தனந்தான் என்று காமராசரும் இராசாசியும் பொருள் கொள்வார்களானால், நாமும் அதே கயவாளித்தனத்தைச் செய்தேனும் இன்றுள்ள அரசியல் நிலைமையைக் காத்துக்கொள்ள முடியும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம். கண்ணுக்குக்கண்' 'பல்லுக்குப் பல்' - என்பதை மோசே-காலத்து நெறியாக இதுவரை நாம் நினைத்து வந்தோம். ஆனால் அதுதான் கீதையிலே சொல்லப்பெற்றிருக்கும் அரசியல் மாமந்திரம் என்பதாக இராசாசி கூறுவாரானால், அதைக் கடைப்பிடிக்க இராசாசிக்கு மேல் நமக்கும் தெரியும்; அப்படிக் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நேரமும் தெரியும்.

ஆனால் இராசாசியும் காமராசரும் இணைந்து ஒன்று சேர்வதற்குரிய காரணத்தை இருவருமே தனித்தனியாகக் கூறுவதிலிருந்துதான், அவர்கள் இருவருக்கும் அரசியலைக் கைப்பற்றுவது நோக்கமில்லை என்றும் அவ்வாறு அரசியலைக் கைப்பற்றும் துணிவு அவர்களுக்கு இல்லை என்றும் நாம் கருத வேண்டியிருக்கின்றது. எனவே அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கே நடுவணரசையும், தமிழக அரசையும் கைப்பற்றிவிடுவார்கள், அந்த நிலையில் நமக்கும் ஏதாவது கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு தமுக்கடித்துத் திரியும் அரசியல் தித்திருக்கக்காரர்களை அவ்வாறு எண்ணி ஏமாறி விட வேண்டா என்று எச்சரிக்கின்றோம்.

இனி, நானும் காமராசரும் ஒன்று. என்று இராசாசி கூறுவதற்குரிய அடிப்படை நோக்கம்தான் என்ன? அவர் அறிக்கைக் கூறுவது இது (தமிழ்ப் படுத்தாமல் அவரின் அம்மாமித்