பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

73

ஏதாகிலும் நன்மைகள் கிடைத்து வரலாம். அவற்றுக்காக அவர்களின் வாய்கள் இப் பிரிவினையெழுச்சியின் மேல் குப்பைகளையும் சருகுகளையும் வாரியெறியலாம். ஆனால் அவற்றையே பற்றிக்கொண்டு கனன்றெழுகின்ற உரிமைத்தீ, விடுதலை உணர்வு அவர்களையும் தீய்த்து. உங்களையும் முகங்கருக்குகின்ற நாள் ஒன்று வரத்தான் வரும். அந்த நல்ல நாளை வரவேற்க, அணியமாகிக் கொள்ளுங்கள் என்பதையே தென்மொழி உங்கட்கு முன் எச்சரிக்கையாக முழங்குகின்றது. என்று கருதிக்கொள்ளுங்கள்.

தென்மொழியின் இந்தப் போக்கைப் பொறாமையும் பொச்சரிப்பும் உடைய சிலர் 'தன் முனைப்பு’ என்னலாம் 'தன்னழுத்தம்’ என்னலாம்; சிலரோ தம் கட்சித்தலைவர்களைக் கொண்டு மட்டுந்தான் இக்கோரிக்கை முழங்கப் பெறல் வேண்டும் என்று ‘கந்தாயம்' பேசலாம். ஆனால் தென்மொழியைப் பொறுத்தவரை இனி எந்தத் தமிழகத் தலைவரையும் நம்பிப் பயனில்லை என்ற நிலை தெளிவாக உணரப் பெற்றுவிட்டது. எதற்காகச் சட்டமன்றம் போக வேண்டும் என்று தொடக்க நிலையில் தமிழகப் பிரிவினை விரும்பிய தலைவர்கள் கரணியங்கள் காட்டினரோ, அந்தக் கரணியங்கள் அவர்கள் அமர்ந்த பதவி நாற்காலிகளுக்கு ஆணியாக அறையப் பெற்றுவிட்டன. அவர்களின் மனைவி மக்களுக்கும் எதிர்காலப் பிறங்கடைகளுக்குமான ஒப்பந்தப் பட்டயங்களாகவும், நில புலம் வீடுகளாகவும் மாற்றப் பெற்றுவிட்டன. இன்னும் விளக்கமாகச் சொன்னால் அவர்கள் தங்களுக்குள்ளேயே எவரெவர் முன்னே போவது; எவரெவர் பின்னே வருவது என்ற போராட்டத்தை வேறு எழுப்பிக்கொண்டு விட்டனர். தமிழர் வடவரோடு ஒட்டி உறவாட வேண்டியதற்காகக் கூறப்பெறும் ஒருமைப்பாட்டின் பகட்டான போலி உரைகளைப் போலவும் செயல்களைப் போலவும், நம்மையாள வந்த - வழி நடத்திச் செல்ல வந்த தலைவர்களிடையில் போலியான ஓர் உடன்பிறப்புப் பாசமும் ஒற்றுமையுணர்வும் பேசப்பெறுகின்றன; காட்டப் பெறுகின்றன. அவர்கள் உள்ளத்தி விருப்பதெல்லாம் ஒருவரை ஒருவர் எடுத்து விழுங்குவதற்கான கால ஆராய்ச்சியும், இட ஆராய்ச்சியுந்தான், இத்தகைய தலைவர்களை நோக்கிக் கைகாட்டும் குட்டித் தலைவர்களைப் பற்றியோ, குறும்புப் பேச்சுக்காரர்களைப் பற்றியோ நமக்குக் கவலையில்லை. அவர்களுடைய அறிவின் மேலும் நம்பிக்கையின் மேலும் அவர்களுக்கிருக்கும் அழுத்தமான பிடிப்புப்