பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

93



 
வரலாறு படைத்தது திருச்சி
கொள்கைச் சிறப்புடைய முதல் விடுதலை மாநாடு.


வீறு கொண்ட ஊர்வலம்! காவலர்கள் வெகுண்டு பார்த்தனர்! விழித்து, வேடிக்கை பார்த்தனர்!

செய்தித்தாள்களின் ஒருமித்த இருட்டடிப்பு! மாநாட்டைப் புறக்கணிக்க ஆட்சியாளர் செய்த சூழ்ச்சி! இருநாள்களிலும் உறுப்பினர்களின் நெருப்புரைகள்! தொடங்கிற்று தமிழக விடுதலை இயக்கம்!

தூங்குகின்ற தமிழர்களும், தொடை நடுங்கிக் கோழைகளும், காட்டிக் கொடுக்கும் நரிகளும், பொறாமைப் பிண்டங்களும், தான் தோன்றித் தம்பிரான்களுமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தனர்! தென்மொழி மறவர்கள் அத்தனைப் பேரும் தவறாது வந்திருந்தனர்!

மாநில அரசு, நடுவணரசு, மறைமுக நடவடிக்கைகள்!
தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு
(நிகழ்ச்சிச் சுருக்கம்)

கடந்த விடைத் திங்கள் 28,29 (சூன் 10,11-1972) காரி, ஞாயிறு நடைபெற்ற தமிழக விடுதலை மாநாட்டிற்கு அஃதாவது தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டிற்கு என சூன் 9ஆம் பக்கலே தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும்,