பக்கம்:வேமனர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு வழியாக அமைந்தது. சில தேவதாசிகள் கலைத்திறம் நிறைந்த ஆடலணங்குகளாகவும் பாடகர்களாகவும் திகழ்ந்தனர். இப்போது இள மங்கையரைக் கடவுளருக்கு உரிமையாக்கும் பழைய வழக்கத்தைச் சட்டம் மூலம் விலக்கப் பெற்றுள்ளது.

தோடி ராகம்: இசையின் ஒரு முறை.

நன்னயர்: பதினோராம் நூற்றாண்டில் இராஜமகேந்திரபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரத்தின் கரையோரப் பகுதியை ஆட்சி புரிந்த கீழைச் சாளுக்கிய அரசனை இராசராசநரேந்திரனின் அரசவைக் கவிஞர். தன் அரசப் புரவலரின் ஆணைக்கிணங்க, நன்னயர் மகாபாரதத்தின் மொழி பெயர்ப்பை மேற்கொண்டார்; ஆனால் அதனை முடிக்கும் வரை இவர் உயிர் வாழவில்லை. முதல் இரண்டு பருவங்களையும் மூன்றாவது பருவத்தின் ஒரு பகுதியையும் மட்டிலுமே மொழி பெயர்த்தார். ஒரு தெலுங்கு இலக்கணம் உட்பட ஏனைய ஐந்து நூல்கள் இவர்பெயர்மேல் ஏற்றப் பெற்றுள்ளன. ஆனால் இக் கருத்து இன்னும் வாதத்திற்குரியதாகவே உள்ளது. அங்ங்ணமே, இவர்தான் தெலுங்கு மொழியின் முதல் கவிஞராவர் என்று கொண்டாடப் பெறும் உரிமையும் வாதத்திற்குரியதாக உள்ளது. என்ற போதிலும், இவரது நூலை வழக்கிலுள்ள மிகப் பழைமையான தெலுங்கு. இலக்கியமாக இருப்பதால், இவர் 'வகனுசாசனர்' (மொழியின் சட்டத்தை வழங்கியவர்) என்று போற்றப் பெறுகின்றார்.

நாகார்ச்சுனர்: புத்த சமய தத்துவ அறிஞர். பேராசிரியர் ஸ்டெச்சர்பாஸ்கியின் (இரஷ்ய நாட்டு அறிவியல் கழகத்தைச் சார்ந்தவர்) கருத்துப்படி "மானிட இனத்தின் தத்துவ அறிஞர்களுள் மிகமிகச் சிறந்தவர்." கி.பி. முதல் நூற்றாண்டினைச் சார்ந்த இவர் மத்யமிகா பிரிவு புத்த தத்துவத்தை வளர்த்தார். இப்பொழுது ஆந்திரத்தில் நாகார்ச்சு மலை என வழங்கப்பெறும் சிரீபர்வதத்தில் தம்முடைய இறுதி நாட்களைக் கழித்தார்.

நாமதேவர் (கி.பி. 1270-1350): தையல் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்த இவர் ஒரு மராட்டியக் கவிஞர்; திருத்தொண்டர்; பஞ்சாப்பில் இவர் பத்து ஆண்டுகளைக் கழித்தார். இவருடைய பாடல்களில் சில 'கிரந்தா சாகிப்' என வழங்கப் பெறும் சீக்கர் மறையில் இடம் பெற்றுள்ளன.

113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/120&oldid=1256293" இலிருந்து மீள்விக்கப்பட்டது