பக்கம்:வேமனர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னையாரிடமிருந்து வெளிப்படும் பழியுரைகளை அணுகவிடாமல் தடுத்தமையாகாது. பரத்தையொருத்தியின் அன்னை சாவதற்கு முன்னர் ஒருவர் அவளிடம் சிக்கிக்கொள்ளுதல் எவ்வளவு துயர் மிகுந்த நிலையாகும்?" என்பது ஒரு பாடலின் கருத்தாகும். உறுதியாகவே பரத்தையின் கிளைக்கதையின் முற்பகுதிக்கு இது காரணமாக அமைகின்றது எனலாம்; இதன் பிற்பகுதியின் அடிப்படை அடியிற் காணும் பாடலில் காணப் பெறுகின்றது: "கள்ளக் காதலன் ஒருவன் அன்பு குறைந்து வெறுப்பால் தன் வைப்பாட்டியை விட்டு விலகின் பிறகு, அவளது அழிவுபற்றி அவன் ஏன் தொந்தரவுபடவேண்டும்? இலையிலிருந்த உணவை உண்ட பிறகு அதனைத் தெருவில் வீசி எறிகின்றாய். அது சாக்கடையில் விழுந்தால் அதனால் உனக்கு ஆவது என்ன? வேமனர் தன்னுடைய பெருமிதம் புண்பட்ட காரணமாகத் தானகவே, பரத்தை அல்லாமல், தம்முடைய உறவிற்கு முடிவுகட்டினதை இந்தப் பாடல் குறிப்பிடுவதாகக் கருதுவது அறிவுக்குப் பொருந்த வில்லையா?

பணத்தட்டுப்பாட்டால் நேரிடும் தொல்லைகளைப் பற்றிய தெளிவான சான்று அவர் கடன்படுவதைக் கடிந்து கூறுவதாகும். "கடனின்றி வாழும் ஒருவனே மக்களுள் மிக்க செல்வந்தனவான்’ என்று அவர் கூறுகின்றார் ஒரு பாடலில்.

இங்ங்ணமே அவருடைய குடும்ப வாழ்க்கை மிகமிக மகிழ்ச்சியற்றதாக இருந்தது என்று உய்த்துணர்வதற்கு அவரது பாடல்களில் பல குறிப்புகளைக் காண்கின்றோம். அது மகிழ்ச்சியற்றதாக அமைவதற்கு அவர் அதற்கு ஒரு நேர்மையான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பது மட்டிலும் ஒரு காரணம் அன்று. அவரது தொடக்க கால வாழ்க்கையிலும், இறைவனைத் தேடி அலைபவன் தந்தையையும் அன்னையையும், துணைவியையும் குழந்தைகளையும், உண்மையில் எல்லோரையும் எல்லாவற்றையும் கைவிட்டொழிக்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்த காலம்வரையிலும், வேமனர் மணவாழ்க்கையை உயர்வாகவே கருதினார். "ஒருவனுக்கு அன்பு நிறைந்த துணைவியும் குழந்தைகளும் இருந்தால் அவன் இறைவனின் இருப்பிடத்தின்மீது பேரவாக்கொள்வது ஏன்?" என்று ஒரு பாடலில் கேட்கின்றார். தனது பிற்கால வாழ்க்கையில் ஒருவர் அடங்காப்பிடாரிகளையும் வம்புச் சண்டையிடுகின்ற பெண்களையும் தகுதியற்ற பிள்ளைகளையும் பற்றி வசை புராணம் பாடுவாரேயானால் மகிழ்வற்ற மணமேயன்றி வேறு எது அவரிடம் அத்தகைய கசப்பினை உண்டாக்கியிருக்கும்? அடிக்கடி மக்கள் நாவில் தாண்டவமாடும் பாடலொன்றில் குற்றங்கண்டு தொந்தரவு கொடுக்கும் மனைவியைக் கிள்ளும் செருப்புடனும், பெண்டிர் அணியும் குல்லாயினுள்ளிருக்கும் குளவியுடனும், கண்ணில்விழுந்த

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/52&oldid=1243391" இலிருந்து மீள்விக்கப்பட்டது