பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 அட்டிகை: கழுத்தை ஒட்டியிருக்கும் அணிவகை [ஒட்டு>அட்டு அட்டி>அட்டிகை] அட்டை: நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரி (ஒட்டு>அட்டு>அட்டை] அடகு : 1. இலைக்கறி, 2. பச்சிலை. [அடை = இலை அடை>அடகு] அடகு: 1. கொதுவை, 2. அடைமானம். [அடைவு >அடவு அடகு அடர்-தல் : 1. நெருங்குதல், 2. செறிதல். அள்ளுதல் = நெருங்குதல். [அள் = நெருக்கம்> அடு> அடர்-தல்] வேர்ச்சொல் சுவடி அடவி : 1. மரமடர்ந்த காடு. 2. சோலை. 3. மிகுந்த கூட்டம். [அடர்>அடர்வி>அடவி.] அடுக்களை: 1. அடுப்பு. 2. சமையலறை. அடுதல் = வெப்பத்தினால் சூடு செய்தல், சமைத்தல் (அடு + களம் - அடுக்களம்>அடுக்களை.] அண்டு-தல் : நெருங்குதல் அண்ணுதல் = பொருந்துதல் [அள்>அண்- அண்டு-தல்.] அண்ணு-தல் : 1.கிட்டுதல், 2. சேர்தல், 3. ஒத்தல். அள்(ளு)தல் = நெருங்குதல் [அள்>அண்>அண்ணு-தல்.]