பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அகப்பா : 1. உயர்ந்த கோட்டை மதில். 2. அகழி. உகப்பு = உயர்ச்சி [உகப்பு>அகப்பு > அகப்பா] (அகழ் + பா - அகப்பா] அகப்பு': ஆழம் அகழ்தல்=தோண்டுதல். [அகழ்>அகழ்ப்பு அகப்பு} அகப்பு: மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு, ஆப்பு. அகைத்தல் = அடித்தல்,செலுத்துதல் [அகை>அகைப்பு>அகப்பு] அகப்பு : எழுச்சி உகப்பு = உயர்ச்சி [உகப்பு>அகப்பு.] அகப்பை : குழிவான மொள்ளும் கரண்டி அகழ்தல் = தோண்டுதல் [அகழ்ப்பை > அகப்பை] அகழி : கோட்டையைச் சூழ்ந்துள்ள நீர்க்கிடங்கு அகழ்தல் = தோண்டுதல். [அகழ்>அகழி] அசங்கு-தல் : அசைதல் அலுங்குதல் = குலுங்குதல் [அலுங்கு>அலங்கு அசங்கு-தல்.] அசதி : களைப்பு, தூக்க மயக்கம். [அயர்>அயர்தி> அசர்தி> அசதி அசப்பு: கவனமின்மை அயர்தல் = சோர்ந்திருத்தல் [அயர்>அயர்ப்பு அசர்ப்பு> அசப்பு} 9