பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அணிமை : அருகு அள்(ளு)தல் = நெருங்குதல் [அள்>அண்>அணி அணிமை] அணிமை: நுண்மை அள் = கூர்மை, நுண்மை [«ள்>அண்>அணி > அணிமை அணு: 1. நுண்மை, 2.நுண்மையானது. அள் = கூர்மை, நுண்மை [அள்> அண்> அணு] அணுக்கம்: 1அண்மை, 2. நெருக்கம். அள்(ளு)தல் = நெருங்குதல் அணுகுதல் = கிட்டுதல், நெருங்குதல் [அள்>அண்>அணுகு>அணுக்கு அணுக்கம்.] அணை-த்தல்: தழுவுதல் அண்ணுதல் = பொருந்துதல் [அள்>அண்>அணை-த்தல்] அணை : வரும் வெள்ளத்தை அணைத்துத் தடுத்துத் தேக்கப்பட்ட பெருந்தடுப்பு. [அண்ணுதல்>அணைதல்>அணைத்தல்>அணை] அதக்கு-தல் : 1. மெல்ல அமுக்குதல், 2. கசக்கியிளக்குதல். [அல்>அலு>அலுங்கு>அலுக்கு>அதுக்கு அதக்கு-தல்.] அதிகரி-த்தல் : 1. மிகுதல். 2. வளர்ச்சியடைதல். அதி = கடுத்தல் = மிகுதல் [கடு>கடி>கரி>அதிகரி-த்தல்.] 11