பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 அதுக்கம் : 1. அமுக்கம், 2. ஒதுக்கம், 3. அடிப்பு. அதுக்குதல் = அமுக்குதல் [அதக்கு>அதுக்கு அதுக்கம்.] அப்பம் : 1. பண்ணிகார வகை, 2. அடை, 3. உணவு. உப்புதல் = பருத்தல், எழும்புதல் (உப்பு உப்பம் அப்பம்.] அம்பரம் : 1. தேவருலகம், 2. உயர்ந்த வானவெளி உ = உயர்ச்சிப்பொருள் [உ> உம்பு உம்பர்=மேல், மேலுலகம்.] (உம்பர் -உம்பரம்-அம்பரம் அம்பல் : குவிந்த மொட்டு அம் = பொருந்தல், குவிதல் [அம்>அம்பு அம்பல் அம்பலம்: கூட்டம், கூடுமிடம் [அம்>அம்பு அம்பல் அம்பலம். வேர்ச்சொல் சுவடி அம்மம்: 1. பெண்மார்பு, 2. தாய்ப்பால், 3. குழந்தையுணவு. மருமம்=மார்பு [மருமம்>மம்மம் அம்மம்.] அம்மி: அமுக்கியரைக்கும் கல்லொடுகல்; இணைக் கற்கள் [அம்> அம்மு = அமுக்குதல்; அம்>அம்மி ] அமிழ்து: 1. உணவு, 2. தாய்ப்பால். அம்மம் = தாய்ப்பால் (அம்மம்>அம்மு அம்முது அமுது அமிழ்து] அமை : 1. அமைவு, 2. பொருத்தம். அம்முதல் = பொருந்துதல், கூடுதல், [அம்>அமை]