பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அமைதி : 1. பொருந்தியிருத்தல், அமைதியாயிருத்தல் [அமை>அமைதி ] அயம்: 1.பள்ளம், 2. குளம், 3. சுனை, 4. நீர், 5மழைநீர், 6. சேறு. [பள்> பய்> பயம்> பயம்பு= பள்ளம். பயம்>அயம். இனி பள்ளம் பய்யம் பயம் என்றுமாம்.] அயில்-தல்: 1. உண்ணுதல், 2. பருகுதல், 3. குடித்தல். [ஐ=நுண்மை, மென்மை. ஐ>அய்>அயில்-தல்] அரக்கு-தல் : 1. அழுத்துதல், 2. தேய்த்தல். [அர்>அர>அரவு அராவு-தேய்த்தல் அரவு>அரகுஅரங்கு -அரக்கு-தல்.] அரக்கு : 1. சிவப்பு, 2. செம்மெழுகு. அல்>அர்>அரம் =சிவப்பு. [அர்>அர>அரகு அரக்கு] அரங்கம்: 1. ஆற்றிடைக் குறை, 2. பலரும் கூடும் மேடை அல்லது பெரிய அறை. அர் = அறுத்தல் பொருள்அர்>அராவு = அறுத்தம் [அர்>அர>அரகு -அரங்கு - அரங்கம்.] அரம் : 1. இரும்பு, செம்பு முதலிய மாழைகளை அராவும் இரும்புக்கருவி, 2. வாளரம் அரம்பம். உர் = பொருந்தற்பொருள். [உ> உரசு=அர்> அரவு> அராவு. அர்>அரம்.] அரவம்': பாம்பு அரவு-தல் = வருத்துதல் [அரவு>அரவம்.] அரவம்: 1. ஒலி, 2. ஓசை, 3. பேரொலி, 4. இரைச்சல், 5ஆராவரம், 6 .வில்நாண், 7.அரிபெய் சிலம்பு. உர்-கூடுதற்கருத்து, உர்-உரசு [உர்=அர்>அர>அரவு>அரவம்.] 13