பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 வேர்ச்சொல் சுவடி அரவம்' : ஆசை ஆர்தல்= அன்புசெய்தல், [ஆர்>ஆர்வு>ஆர்வம்>அரவம்.] அரவு: பாம்பு அர=அரம்போற் கூரிய பல்லையுடைய பாம்பு [அர்>அர>அரவு} அரள்(ளு)-தல் : அச்சங்கொள்ளுதல் அர் = அரம் = அச்சம், துன்பம் [அர்>அரம்>அரள்(ளு)-தல்.] அரற்று-தல் : அஞ்சிக் கத்துதல் அலறுதல் =அச்சத்தால் கத்துதல் [அலறு> அரறு > அரற்று-தல்.] அரன் : சிவன் உல் = வெப்பப் பொருள் உல்>அல்>அர்=வெப்பத்தால் சிவத்தல் அர்>அரம்>சிவப்பு [அர்>அரம்>அரன்=செந்நிறமான சிவன்] அராகம்: வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் ஆறு உறுப்புகளுள் ஒன்று. [அரவம்>அராவம்> அராகம்=ஒலிச்சிறப்புள்ள செய்யுளுறுப்பு அல்லது பண்] அரி-தல் : அறுத்தல் அரி = சிறுமை, நுண்மை [அர்>அரி -தல்.] அரிசி : சிறு அளவுள்ள தவசமணி [ அரி > அரிசி; சி=சொல்லாக்க ஈறு}