பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [செம்> செம்பு ] செம்மல் 1. தலைமை, 2. வலிமை, 3. சிவன், 4. இறைவன். செம்= சிவத்தற் கருத்துவேர் [செம்> செம்மல்] செம்மை: 1.சிவப்பு, 2. நேர்மை, 3. பெருமை. செய்ம்மை = சிவத்தற் கருத்துவேர் [செய்ம்மை> செம்மை.] செய்கை : செயல் செய் = இயங்குதல் செய்> செய்கை.] செய்தி : செய்த நிகழ்வுக் குறிப்பு செய்தி = நிகழ்ச்சி செய்> செய்தி. செயல் : தொழிற்படல் செய்> செயல்] செயலர் : செயற்படும் பொறுப்பாளர் செய்> செயலர்.] செயற்கை : மாந்தச் செயற்பாட்டினால் அமைந்தது செய்> செயல் செயற்கை.] செரி-த்தல்: உண்ட உணவு வயிற்றில் பக்குவப்பட்டுச் சென்றுவிடுதல் சிதை> செரி-த்தல்.] செருக்கு : 1. இறுமாப்பு, 2. மதிக்காத போக்கு. செரு = போர், பிணக்கு 101