பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 வேர்ச்சொல் சுவடி [செறி> சேறு சைகை : கை, விளக்குப் போன்றவற்றால் காட்டப்படும் குறிப்பு. செய் + கை > செய்கை > சைகை] சொட்டு: குட்டு சுல் = குத்துதல் பொருள் [சுல்> சொள்> சொண்டு> சொட்டு சொட்டுதல்: 1.நீர், 2. துளித் துளியாய்ச் சிந்துதல். சுல் = குத்துதற் கருத்துவேர் [சுல்>சுள்> சொள்> சொட்டுச் சொட்டை : தலையில் ஏற்படும் வழுக்கை சொள்ளை> சொட்டை] சொண்டு: 1. உதடு, 2. பறவை மூக்கு. [சுல்>•ள்> சொள் சொண்டு சொத்தை: புழு வண்டு முதலியன அரித்தது சுல் = துளைத்தற் பொருள் [சுல்>•ள்>சொள்> சொட்டை> சொத்தை] சொந்தம் : 1. நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவர்க்குள்ள உரிமை, 2. நெருங்கிய உறவு. சொம் = சொத்து [சொம்> (சொத்து)>சொந்தம்.] சொல்(லு)-தல்:1. பேசுதல், 2. திருப்பிக் கூறுதல், 3. கட்டளையிடுதல், 4. அறிவுரை கூறுதல், 5. அறிவித்தல், 6. புகழ்தல். சுல் = ஒலித்தற் பொருள் சுல்> சொல் = ஒலி, மொழி சொல்> சொல்(லு)-தல் =உரைத்தல்.]