பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 வேர்ச்சொல் சுவடி தட்டி: தடுப்பான ஓலைப்பின்னல் முதலியன தட்டு தடு> தடுப்பு [தள்> தடு>தட்டு தட்டி] தட்டு: தட்டையாக உள்ள உண்கலம் முதலியன தள் - தட்டை = தட்டிச் செய்த தட்டையான பொருள் [ தள்> தடு > தட்டு தடங்கல்: 1. தடை, 2. அடைப்பு. [தடு>தடக்கு>தடங்கு> தடங்கல்! தடம் : 1. பெருமை, 2. இடம், 3. வழி. தள் - தளம் = இடம் [தளம் > தடம்.] தடயம் : 1. எச்சம், 2. துப்புத் துலக்க உதவும் சான்று. [தடம் தடயம்.] தடிமன்: நீர்க்கோவை தண் = குளிர்ச்சி, நீர்க் கோப்பு தண்> தடு> தடுமம் > தடிமம் தடிமன் ] தண்டனை : ஒறுப்பு தண்டுதல் = அதிகாரத்திற்கு அடையாளமாகத் தண்டு ஒன்றனை வைத்துக் கொண்டு பணம் பெறுதல் (வசூலிப்பவர்) [தண்டு> தண்டம்> தண்டனை] தண்டு : 1. திரண்ட ஊன்று கோல், 2. திரண்ட தடிபோன்ற பொருள் [தள் தண்டு] கீரைத்தண்டு, வாழைத்தண்டு, விளக்குத்தண்டு, முதுகந்தண்டு, வீணைத்தண்டு. தண்டை: தாமரைக் கொடித்தண்டு போன்ற காலணி தண்டு> தண்டை