பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 தாழ்ச்சி : 1. தாழ்கை, 2. கீழ்மை. தள் = வளைதற் கருத்து [தள் > தழு>தாழ் தாழ்ச்சி.] திகழ்-தல்: விளங்குதல் தள் - தள = விளங்குதல் [தள > தக>திக திகழ்-தல்.] திகை: நிலைதடுமாறுகை திக்குதல் = தடுமாறுதல் [திக்கு>திகை] திங்கள் : நிலவு தக-தகம் = எரிவு, சூடு [தக>திக>திகழ்>திங்கள். திசை : திக்கு திக்கு = பக்கம் திக்கு>திகை>திசை] திட்டம் : 1.உறுதி, 2. வரைவு, 3. நிலைப்பாடு. திள் - திண் - திட்டு = உறுதி [திண்>திட்டு>திட்டம்.] திட்டி : மேடு திட்டு = சிறு குன்று (திட்டு>திட்டி திட்டு-தல் : 1. பழித்தல், 2. இகழ்தல். திண்டு = பருமன் திண்டு>திட்டு-தல்.] திட்டு: 1. மேட்டு நிலம், 2. மண்மேடு. துல் = திரண்ட பொருள் துல்>திள்> திண்டு திட்டு வேர்ச்சொல் சுவடி