பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி திட்டை : 1. திண்ணை, 2. உரல். திட்டு = மேடு திட்டு > திட்டை] திட்பம் : 1. வலிமை, 2. மனவுறுதி. திள் - திண்மை = வலிமை [திண்மம்>திட்பம்.] திடம் : 1. வலிமை, 2. வலிமை கலங்கா நிலை, 3. மன உறுதி. திட்டம் = உறுதி [திட்டம்>திடம்.] திண்ணை : வீட்டின் வேதிகை திள் - திண் - திண்மை = வலிமை [தில்>திள்> திண்மை> திண்ணை] திணறு-தல் : மூச்சுத் தடுமாறுதல் திண் - திணர் = செறிவு [திணர்>திணறு-தல்.] திணி-தல்: 1. செறிதல், 2. இறுகுதல். திண் = செறிவு [திண்> திணி-தல்] திரட்சி : 1. உருண்டை வடிவம், 2. கூட்டம். திரள் = திரண்டற் பொருள் திரள்> திரட்சி திரட்டு-தல் : 1. உருண்டையாக்குதல், 2. ஒன்று கூட்டுதல், 3. குவித்தல். திரள் = திரளுதல் பொருள் [திரள்>திரட்டு> திரட்டு-தல் திரிதல் : 1. சுழலல், 2. உலாவல், 3. ஓரெழுத்து மற்றொன்றாக மாறுதல், 4.வளைதல். துல் = வளைதல் பொருள் 111