பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [துல்> துற> திற-த்தல்.] திறத்தல்: 1. கதவு திறத்தல், 2. திரையை நீக்குதல், 3. துளைத்தல், 4. குடை, பொத்தகம் ஆடை முதலியவற்றை விரித்தல். துள் = துளைத்தற் பொருள் [துற திற திறத்தல்] திறம் : 1.கூறுபாடு, 2. உடம்பு, 3.உறுதி,4.வலிமை. துல் = பொருந்தற் கருத்து [துல்>தில்>(திர்)>திரம் = உரம்.வலிமை, உறுதி. திரம் = திறம்-] தின்(னு)-தல் : 1. உண்ணுதல், 2. வெட்டுதல், 3. மெல்லுதல், 4. கடித்தல். துன்-தின் = தின்னுதல் (துல்>துள்-துன்(னு)-தல் = துளைபோன்ற வாயுட் செலுத்துதல்.] தீ-தல்: 1. எரிந்து போதல், 2. அழிதல், 3. பயிர் முதலியன கருகுதல். தேய்-தீ = நெருப்பு தேய்தல் = உரசுதல் (தேய்>தீ.தீ-தல் = எரிதல். கருகுதல். தீங்கு : 1. தீமை, 2. துன்பம், 3. குற்றம். தீ = நெருப்பு [தீ> தீமை தீயின் தன்மை. தீ> தீங்கு] தீட்டு-தல் : 1. கூராக்குதல், 2. உமி நீக்கல், 3. வண்ணம் பூசுதல். தெள்ளுதல் = தெளிவுபடுத்துதல் [தெள்>தெட்டு>தீட்டு-தல்.] தீண்டு-தல்: 1. தொடுதல், 2. பாம்பு முதலியன கடித்தல், 3. சீண்டுதல். துல் = பொருந்துதல் [துல்> துள்> துண்> தூண்> தீண்> தீண்டு-தல்.] தீர்ப்பு: 1. வழக்கின் தீர்ப்பு, 2. தீர்மானம். தீர் = முற்றுப் பெறுதல் [தீர்> தீர்ப்பு] 113