பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி துள் = துளைத்தல், வெட்டுதல் [ துள் > துண் > துணி.] துணிவு : 1. துணிச்சல், 2. ஆண்மை. துள் = பொருந்தற் பொருள், திரண்ட ஆற்றல் பொருள் [துள் > துண்> துணி > துணிவு.] துணை : 1. கூட்டு, 2. ஒப்பு, 3. உதவி, 4. உடன் பிறப்பு, 5.கணவன், 6. LD60)607699). துள் = பொருத்தற் பொருள் [துள் > துண்> துணை] துணைவர் : கணவர் துணைவி : மனைவி துணை = கணவன்-மனைவி ஒருவர்க்கு ஒருவர் துணை [துணை > துணைவி துணைவர்] துப்பு : 1. நுகர்ச்சி, 2. நுகர்பொருள், 3. உணவு, 4. நெய். துய்த்தல் = நுகர்தல் (துய்ப்பு>துப்பு] தும்பி : 1. யானை, 2. வண்டு, 3. ஆண் வண்டு, 4. தட்டான் பூச்சி. தும்பு = துளையுள்ள உறிஞ்சும் உறுப்பு (தும்பு>தும்பி = உறிஞ்சும் உறுப்புடையது) தும்மல் : 1. தும்முகை, 2. மூச்சு வெளித்தள்ளல். துப்பு = வெளித்தள்ளல் (துப்பு>தும்மு தும்மல் துயரம்: 1. மனவருத்தம், 2. துயரம், 3. இன்னல், 4. இரக்கம். துல் = உள்ளொடுங்கல் வேர் துல் > துயர்> துன்பம் [துயர் > துயரம்] துர-த்தல் : 1. துளைத்தல், 2. எய்தல், 3. ஓட்டிச் செலுத்துதல், போக்குதல். துல் = துளைத்தற் கருத்துவேர் [துல் >துர்> துர-த்தல். 115