பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 வேர்ச்சொல் சுவடி துரப்பணம் : துளையிடும் கருவி துள் = துளைத்தற் பொருள் [துல் >துர்> துரப்பு துரப்பணம் / துரவு: பெருங்கிணறு, (தோட்டந்துரவு) துல் = துளைத்தல் [துல் >துர> துரவு.] துருத்தி : 1. உலையூதும் கருவி, 2. காற்றைத் துருத்தி ஊதும் கருவி. துல் = துளைத்தற் பொருள் [துல் >துர > துரு துருத்தி] துருவுதல் : 1. துளைத்தல், 2. தேடுதல், 3. குடைதல், 4. கடைதல். துல் = துளைத்தற் பொருள் [துள் >துர்> துரு துருவு> துருவுதல்.] துலக்கம்: 1. வெளிச்சம், 2. மெருகு, 3. தெளிவு. துல் = தெளிவுப்பொருள் துல்>துலங்கு துலக்கு துலக்கம்/ துலக்கு-தல் : 1. மெருகிடுதல், 2. ஒளிரச் செய்தல், 3. தீட்டுதல். துல் = தெளிவுக் கருத்துவேர் [துல்>துலங்கு துலக்கு-தல்} துவள்(ளு)-தல்: 1. ஒசிதல், 2. வாடுதல், 3. இறுகுதல், 4. கசங்குதல், 5.வளைதல். துல் = வளைதல் [துல் >துள்>துவள் = கசங்குதல். குற்றம்.] துவள்>துவள்(ளு-தல்)] துவை-த்தல் : 1. மிதித்து உழக்குதல், 2. ஆடை தூய்மையாக்கல். தோய்த்தல் = அலசுதல், மிதித்து உழக்கு-தல் தோய்>துவை -த்தல்.] துள்ளு-தல்: 1. குதித்தல், 2. தாவிச்செல்லுதல். துல் = பொருந்தற் கருத்துவேர் [துல் >துள்>துள்ளு-தல்J