பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி துளும்பு-தல்: 1. அசைதல், 2. ததும்புதல். துல்லுதல் = அசைதல் மேலெழும்புதல் [துல் >துளு>துளும்பு துளும்பு-தல்.] துளை-த்தல் : 1. துளையிடுதல், 2. ஊடுருவுதல், 3. வருத்துதல். துள் = துளைத்தற் கருத்துவேர் [துள் > துளை-த்தல்] துறு-த்தல்: 1. Fணித்தல், 2. அமுக்குதல். துல் = துளைத்தற் பொருள் (துறு>துறு-த்தல்.] துறை : 1. இடம், 2. வழி, 3. பகுதி, 4.கூடுமிடம். துல் = நெருங்குதல், சேர்தல். [துல்> துறு>துறை] தூண்: கூரை தாங்கும் திரண்ட கம்பம் துல் = கூட்டுச் சேர்வு [துல்>துள்> துண்> தூண் = திரண்ட கம்பம்] தூண்டுதல்: தொட்டுக் கிளப்பி விடுதல் தீண்டுதல் = தொடுதல், பற்றுதல் (தீண்டு>தூண்டு தூது : அரச செய்தியை முன்கூட்டியே சென்றுரைத்தல் நுதலுதல் = முன்கூறித் தொடங்குதல் நுதல் > நுது துது தூது] தூர்-த்தல்: அடைத்தல் துறுத்தல் = அடைத்தல் (துறு துரு>தூர்-த்தல்.] தெம்பு : 1. தெளிவு, 2, உடல் வலிமை. தெல்- தென் = தெளிவுப் பொருள் 117