பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி தொடுத்தல் = கோத்தல், தொடர்தல் தொடு>தொடர் தொடரி.] தொடு-தல்: 1. தீண்டுதல், 2. பிடித்தல். துல் = பொருந்தற் கருத்து [துல்> துள்> தொள்> தொடு-தல் தொடை : மாந்தரின் இடுப்பைத் தொட்டுக் கொண்டிருக்கும் காலின் பருத்த பகுதி. துல் = பொருந்தற் கருத்து [துல்>துள்> தொள்> தொடு தொடை] தொண்டர்: 1. தொழில் செய்பவர், 2. பொதுத்தொண்டர், 3.அடியார். துல் = துளைத்தற் கருத்து [துல்> துள்>தொள்> தொழு> தொண்டு> தொண்டர்.] தொண்டி: துளை துல் = துளைத்தற் கருத்து [துல் >துள்>தொள் தொளை தொண்டு தொண்டி தொண்டு: "ஒன்பது" என்ற எண் தொள் = துளையுள்ள பொருள் [தொள்> தொண் > தொண்டு) மாந்த உடலில் இருக்கும் ஒன்பது துளைகளை எண்ணி இச்சொல் எண்ணுக்கு ஆகிவந்தது. தொண்டு: கூலிக்காக அல்லாமல் பணிவாகச் செய்யும் தொழில் தொழு = கூலியில்லாத பணிவான பணி, அடிமைப்பணி [தொழு> தொள்> தொண்டு] தொண்டை : 1. மிடறு, 2. குரல்வளை. துல் = துளைத்தற் கருத்து [துல்>துள்>தொள் தொண்டு தொண்டை] தொந்தி: 1. வயிற்றைத் தொத்தியுள்ள தசைப்பகுதி, 2. பெருவயிறு. தொத்துதல் = பற்றிக் கொண்டு தொங்குதல் 119