பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி 120 [தொத்து >தொத்தி>தொந்தி.] தொய்-தல்: 1. இளைத்தல், 2. வளைதல், 3. துவளுதல். துல் = வளைதற் கருத்து [துல்> துள்> தொள்> (தொளதொள)> தொய்-தல்] தொல்லை: துன்பம் துல் = துளைத்தற் கருத்து [ துல்> துன்> துன்பம்; துல்> தொல் தொல்லை.] தொழில்: 1. செயல், 2. உழவு, 3. வேலை. துல் = துளைத்தற் கருத்து நிலத்தைக்கீறிப் பணியாற்றும் மாந்தன் செய்த முதல் தொழில் [துல்>துள்> தொள்> தொளில்> தொழில்] தொழு-தல் : வணங்குதல் துல் = வளைதற் கருத்து [துல்>துள்> தொள் தொளு தொழு-தல் தொழுவம்: மாட்டுக் கொட்டில் தொகு = கூட்டம், சேர்ப்பு [தொகு> தொழு> தொழுவு> தொழுவம்.] தொளை-த்தல்: 1. துளையிடுதல், 2. தொந்தரவு செய்தல். துல் = துளைத்தற் கருத்து [துல்>துள்>துளை தொளை-த்தல்.] தொற்று-தல்: 1. தொடுத்தல், 2. ஒட்டித் தொடர்தல். துல் = பொருந்தற் கருத்து [ துல்> துள்> தொள்> தொறு> தொற்று-தல்] தொன்மை: பழைமை தொல்= பழைமை [தொல்>தொன்மை.] தொன்னை: குழிவான இலைக்கலம்