பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 வேர்ச்சொல் சுவடி தோழன்: 1. நண்பன், 2. துணைவன். துல் = பொருந்தற் கருத்து [துல்>துள்> தொள்> தொழு>தோழம் தோழன்] தோள்: கையின் திரண்ட மேற்பகுதி துல் = பொருந்தற் கருத்து [ துல்>துள்> தொள்> தோள்] தோற்றம்: 1.பார்வை, 2. தொடக்கம். துல்= பொருத்தற் கருத்து [துல்>துள்> தொள்> தோள்> தோன்று தோற்று தோற்றம்.] தோன்று-தல் : 1. கட்புலனாதல், 2. அறியப்படுதல். துல்= பொருந்தற் கருத்து தோன்று-தல் = கண்ணோடு பொருந்துதல் [துல் >துள்> துன்று > தோன்று) நக்கு-தல் : நாக்கினால் துழாவுதல் நாக்கு = உண்ணும் உறுப்பு நாக்கு>நக்கு-தல்.] நகர் : 1. நகரம், 2. மாளிகை. நகு = ஒளிர்தற் கருத்து [நகு> நகர்] நகர் = விளங்கித் தோன்றும் கட்டடங்களாற் சிறந்து விளங்கும் பெரிய ஊர். நகு-தல்: மகிழ்ச்சியோடு சிரித்தல் நூல் = ஒளிர்தற் கருத்து [நுல்>நுகு> நெகு நகு-தல்] நங்கை: அனைவராலும் விரும்பப்படும் பெண்ணிற் சிறந்தாள் நம் + கை = நங்கை