பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி நச்சு : துன்பம், தொல்லை, நஞ்சு நசு = நலிதல், அழித்தல் [நசு> நச்சு] நச்சு- தல்: விரும்புதல் நய-த்தல் = விரும்புதல் (நய>நச>நசு>நச்சு-தல்.] நசி-தல்: 1. அழிதல், 2. நசுங்குதல். நைதல் = அழிதல் [நய்> நை நைசி நசி - தல் நஞ்சு: 1. உயிர்க் கொல்லி, 2. தீயது. நை > நசிதல் = அழிதல் [நய் > நை> நைஞ்சு நஞ்சு] நட்டுவன்: 1. நாட்டிய ஆசிரியன், 2. காலை ஊன்றி ஆடல் கற்பிக்கும் ஆசிரியர். நாட்டுதல் = காலை ஊன்றுதல் (நாட்டு> நட்டு நட்டுவன் நட்பு : தோழமை, நண்பன். நுல் = பொருந்தற் கருத்துவேர் நள் = சேர்தல் [நுல்>நள்> நண்> நண்பு நட்பு நடத்து-தல் : 1. விழா நடத்துதல், 2. ஒருவரை உரிய முறையில் நடத்துதல் (கவனித்தல்). நட = நிகழ்தல் (நட> நடத்து-தல்.] நடவு: நாற்றை நிலத்தில் ஊன்றுதல் நாட்டு = ஊன்றுதல் > (நாட்டு>நட்டு நட நடவு 123