பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நடனம்: கூத்து நடி = ஆட்டம், தாண்டவம் [நடி + அனம் நடனம்.] நடி-த்தல்: ஒரு செயலை ஒத்து அதன் கோலம் செய்தல் நள் = பொருந்தற் கருத்துவேர் [நள்> நளி நடி-த்தல்.] நடு : 1. நடுவம், 2. நடுநிலை. நள் = பொருந்தல் கருத்து நட்டு = நிலை நிறுத்துதல் (நள்>நட்டு > நடு நண்டு: நீரோரத்தில் மண்ணைத்துளைத்து வாழும் உயிர்வகை நொண்டு = துளைத்தற் கருத்துவேர் நொண்டுதல் = தோண்டுதல் நொண்டு>நண்டு) நண்பன்: தோழன் நள் = பொருந்தற் கருத்துவேர் நள் = நட்பு, உறவு [நள்> நண்> நண்பு நண்பன்.] நம்பி: அனைவராலும் விரும்பப்படுபவன் நயத்தல் = விரும்புதல் [நயம்> நயம்பி > நம்பி.] நம்பு-தல்: 1. நம்பிக்கை வைத்தல், 2.ஒப்புதலளித்தல். நயத்தல் = விரும்புதல், ஒப்புதல் (நயம்> நயம்பு> நம்பு-தல்.] வேர்ச்சொல் சுவடி நய-த்தல்: 1. விரும்புதல், 2. அன்பு செய்தல். நைப்பு = விருப்பம் [நள்> நய்> நய-த்தல்.] >