பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி நுல் = பொருந்தற் கருத்து [நெரி> நெரி - தல் நெருங்கு-தல் : அண்மையாதல் நெருங்கு-தல் : இறுக்கமாதல் நெரு = பொருந்தல் கருத்து நெரு>நெருங்கு நெருங்கு-தல்.] நெருடு-தல் : நிமிண்டுதல் நெரு = பொருந்தற் கருத்து நெரு>நெருடு-தல்.] நெருப்பு: ஒளிரும் தீ நுல் = ஒளிர்தற் கருத்து [நுல்> நெல்> நெருநெருப்பு] நெல்: ஒளிரும் வண்ணத்தில் உள்ள தவசம் நுல் = ஒளிர்தற் கருத்து [நுல்> நெல்] நெளி -தல் : வளைதல் நுல் = வளைவுப்பொருள் நுல் நெள்> நெளி> நெளி-தல்.] நெற்றி: முகத்தின் மேற்பகுதி (நுதி (நுனி)> (நுத்தி)> நெத்தி> நெற்றி.] நேரம்: வினை நிகழும் காலப் பகுதி நேர்தல் = நிகழ்தல் [நேர்> நேரம்.] நை-தல்: 1. நசுங்குதல், 2. வாடுதல், 3. மனம் வருந்துதல். நொய்-தல் = நசிதல் நொய்> நை -தல் நொடி-த்தல்: 1. சாய்த்தல், 2. ஒப்புதல். 129