பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி பகர்-தல்: பகுத்துச் சொல்லுதல் [பகு>பகர்-தல்.] பகல் : ஒரு நாளின் ஒளியுள்ள பகுதி பகு = பிளவுபடுதல் [பகு>பகல்] பகை: எதிரி பகு = பிளவுபடுதல் [பகு பகை] பங்கு: பாகம் பகு = பிளவுபடுதல் [பகு>பங்கு] பச்சடி: பச்சையாகவே அணியப்படுத்திய தொடுகறி [ பசுமை>பச்சை + அடிசில் = பச்சடி] பட்டணம் : படகு நிறைந்த நெய்தல் நிலத்தூர் பட்டம்= படகு வகை பட்டம்>பட்டணம்] பட்டம் : பட்டையாகச் சூடும் அணிகலன் பட்டை>பட்டம்] பட்டயம்: செப்புப் பட்டயம் (பட்டை>பட்டையம்> பட்டயம்.] படகு: படம் போல் பாய் கட்டிய தோணி [படம்>படகு} பண்டம்: பண்ணப்பட்ட பொருள் [பண்>பண்டு பண்டம்] 131