பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 வேர்ச்சொல் சுவடி பண்டிதம்: பல பொருள்களை அறிந்த புலவன் (பண்டு>பண்டம் பண்டிதன் பண்டிதம்] பண்டை: பழைமை, முற்காலம். பண்டு> பண்டை] பண்ணியம், பணிகாரம் : பண்ணப்பட்ட உண்பொருள் [பண்ணு> பண்ணியம்] பத்தாயம்: 1. நெல் முதலிய தவசம் இட்டு வைக்குங் களஞ்சியம், 2. பெரும் பெட்டகம். பற்று = வைப்பு [பற்று பத்து பத்தாயம்.] பத்தை: சிறு துண்டு [பட்டை பற்றை பத்தை] பதக்கம் : சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் பட்டையான கழுத்தணி [பட்டை> பட்டக்கம்> பதக்கம் / பதடி : 1.பதர், 2. உமி, 3. பயனின்மை, 4. வில். [பதர் பதடி] பதுமை : 1. பாவை, 2. உருவச்சிலை. படிதல் = உருவம் படிதல் [படிமை பதிமை பதுமை] பரிசல் : சிற்றோடம் புரி = வட்டமாகப் பின்னப்பட்ட மிதக்கும் கூடை [புரிசு>பரிசல்] பருப்பு: பருத்த விதை பருத்தல் = பெருத்து இருத்தல் (பரு>பருப்பு) பருவம்: 1. பயன்தரும் காலம், 2. பழுக்கும் காலம்.