பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி பழுவம் = பழுக்கும் காலம் (பழுவம் >பருவம்.] பல்லி: சுவரில் ஒட்டிக்கொண்டு நகரும் முதுகெலும்பு உயிரி புல்லுதல் = 1. பொருந்துதல், 2. ஒட்டுதல். [புல்லி>பல்லி] பலகணி: காற்றோட்டத்திற்காகப் பல துளை (கண்) உள்ள சாளரம் (சன்னல்) [ பல + கண் +இ = பலகணி ('இ' சொஆஈறு)] பவ்வம்: பரந்து இருக்கும் கடல் பாவுதல் = பரவுதல் பாவு பவ்வு பவ்வம்.] பழித்தல் : 1. இகழ்தல், 2. அவமதிப்புச் செய்தல். பள்ளம் = தாழ்வுக்கருத்து [பள் > பழி> பழித்தல்.] பள்ளி: 1. பள்ளமான துயிலிடம், 2. பள்ளிக்கூடம், 3.சமணர்துயிலிடம். பள்ளம் பள்ளி பளிங்கு : 1. படிகம், 2. கண்ணாடி. பள்>பள (பளபளப்பு) [பள்> பளி> பளிங்கு] பறை : 1. முரசு, 2. சொல். பறைதல் = ஒலிமிகுத்துச் சொல்லுதல், பறையடித்துச் சொல்லுதல் [ பறைதல் > பறை] பன்மை: 1. ஒன்றல்லாதது, 2.தொகுதி. [பல்> பன்>பன்மை] பன்றி: கொழுத்த உடலுள்ள அல்லது வெள்ளை விலங்கு வகை 133