பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி வாழும், படுக்கும் இடம் (ஆயர்பாடி) [படு பாடி] பாடு-தல்: 1. பண்ணிசைத்தல், 2. பாட்டு ஒப்பித்தல். பா = இசைக்கேற்ப சொல் கூட்டுதல் [பா> பாடு-தல்.) பாண்டம்: பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்ட கலம் பள் = துளைத்தற் கருத்துவேர் பள்ளமாகத் தோண்டிய அல்லது தோண்டியது போன்ற கலம் [பள்> (பண் )> பாண்டம்.] பாணர்: பாடல் பாடுவதைத் தொழிலாகக் கொண்ட பிரிவினர் பண் = இசை பண்> பண்ணர் > பாணர்.] பாதம்: காலின் அடிப்பகுதி பதி = நடத்தலால் அழுந்தும் கால்அடி [பதி> பாதம்.] பாதி: அரைப்பகுதி [பகுதி பாதி.] பாதை: நடக்கும் வழி பதி = கால் பதிய நடத்தலால் ஏற்பட்ட தடம் [பதி> பாதை] பாப்பா : சிறு குழந்தை பார்ப்பு = இளமை பார்ப்பு பாப்புபாப்பா] பாம்பு: ஊர்ந்து செல்லும் உயிரிவகை பம்புதல் = நீண்டு செல்லுதல் (பம்பு பாம்பு] பாய்: கோரையிலான விரிப்பு பாவுதல் = பரவுதல் [பா பாய்.] 135