பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

136 வேர்ச்சொல் சுவடி பிஞ்சு: 1. இளங்காய், 2. இளமையானது. பிந்துதல் = பின்வந்தது முந்துதல் = முன்வந்தது [ முந்து> முத்தியது முற்றியது.] [பிந்து பிஞ்சு பிட்டம்: 1. பின்பக்கம், 2. இடுப்பின் பூட்டு. புள் = பருத்தற் பொருள் [புள்>புட்டு > புட்டம்>பிட்டம்.] பிணி-த்தல்: சேர்த்துக் கட்டுதல் புள் = பொருந்தற் கருத்துவேர் [புள்> புண்> புணி> பிணி-த்தல் பிணி : உடலை நெருக்கி வருத்தும் நோய் புள் = பொருந்தற் கருத்துவேர் [புள் புண் > புணி பிணி] பிழி-தல்: கையால் இறுக்கிச் சாறு வெளியேறச் செய்தல் புள்=1.பொருந்துதல், 2. நெருக்குதல். [ புள்> பிள் > பிழி > பிழி -தல்.] பிள-த்தல் : 1. பிரிவுபடுதல், 2. வெடிபடுதல். புள் = துளைத்தற் கருத்துவேர் [புள்> பிள்> பிள-த்தல்.] பிறகு : 1.பிற்பாடு, 2. பிற்காலம். பின் = பிந்தின காலம் [ பின் பிற > பிறவு பிறகு ] பிறப்பு : பிறத்தல் பிள் = துளைத்தற் கருத்துவேர்