பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [ பிள்> பிற > பிறப்பு] பிள்ளை: வயிற்றில் உருவாகி வெளிவந்த குழந்தை பிள் = துளைத்தற் கருத்து [பிள் பிள்ளை.] புகா : உணவு புகுதல் = உட்செல்லுதல் > [புகு> புகா] புகு-தல் : உட்செல்லுதல் புல் = துளைத்தற் பொருள் [புல்> புழு புகு-தல்.] புடலங்காய் : உள்துளையுள்ள காய் புழல் = துளை [புழல்> புடல் + அம் +காய்] புடவி : விரிந்தவிண் புடை= 1. பகுத்தல், 2. வீங்குதல். [புடை> புடைவி> புடவி = பருத்த ஞாலம்.] புடவை: உடலைச்சுற்றி உடுக்கப்படும் மகளிர் உடை புடை = சூழ்ந்த நிலை புடைவை> புடவை] புணர்-தல்: 1. பொருந்துதல், 2. கலவி செய்தல். புள் = பொருந்தற் பொருள் [புள்> புண்> புணர்-தல்.] புத்தகம்: நூல் பொருதல் = பொருந்தற் கருத்துவேர் பொருத்து +அகம் - பொத்தகம் புத்தகம். புரட்சி : 1. துணிவுடன் செய்யும் புதுமை, 2.குறுகிய முயற்சியில் 137