பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 வேர்ச்சொல் சுவடி ஏற்படும் பெருமாற்றம். (புரள்> புரட்சி. புரிதல் : 1. விரும்புதல், 2. படைத்தல், 3.ஈனுதல், 4.கொடுத்தல். புல்லுதல் = நட்புச் செய்தல் [புல்>புர்>புரி] புரை : 1. உட்டுளை, 2. குரல்வளை, 3. விளக்குமாடம், 4. கண்ணோய் வகை. புல்லுதல் = துளைத்தற் பொருள் [புல்> புர்> புரை] புலமை : 1. கல்வி, 2.மெய்யறிவு, 3. செய்யுளியற்றும் ஆற்றல். புல் = பொருந்துதல் கருத்து [புல்> புலம்> புலமை] புலி : கூர் நகங்களைக் கொண்ட காட்டு விலங்கு புல்லுதல் = பற்றுதல் [புல்> புலி] புழல்: 1. உட்டுளை, 2. நீர்வழி, 3. சாக்கடை. புல்லுதல் = துளைத்தல் [புல் >புள்>புழு புழல் புழு : துளைத்து வாழும் உயிரி புல்லுதல் = துளைத்தல் [புல்>புள்> புழு) புழை : 1. துளை, 2. குழாய், 3. வாயில், 4. காட்டுவழி. [புல்>புள்> புழு புழை புனல் : 1. குறுகிய வழியிலும் புகுந்து செல்லும் நீர்நிலை, 2ஆறு. புல்லுதல் = துளைத்தற் கருத்து [புல்>புன்>புனல்] புனை-தல் : 1. சூடுதல், 2. அழகுபடுத்துதல். புல் = பொருந்தற் கருத்து [புல்>புன்>புனை-தல்} பூ-த்தல் 1. தோன்றுதல், 2. மலர்தல்.