பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி பொல்= ஒளிர்தல் [பொல்> புல்>பூ-த்தல்.] பூசல் : போர் பூசு = பொருந்தற் கருத்து [பூசு பூசல்.] பூட்டு-தல்: 1.மாட்டுதல், 2. இணைத்தல் புல் = பொருந்தற் கருத்து [புல்>பூள்>பூண்> பூட்டு-தல் பூண்-(ணு)-தல் : அணிதல் புல் = பொருந்தற் கருத்து [புல்>பூள்> பூண்(ணு)-தல்.] பூத்தல்: ஊதிப்பருத்தல் (நீறுபூத்த நெருப்பு) ஊதுதல் = பருத்தல் [ஊது>பூது>பூத்தல்.] பூதம் : நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி ஆகிய ஐம்பூதங்கள். பூ - பூதுதல் = பருத்தற் கருத்து [பூ>பூது>பூதம்.] பெட்டி : 1. பண்டங்களை வைத்துக் காக்க உதவும் மூடியுள்ள கலம், 2.கூடை பெள்-தல் = 1. பேணுதல், 2. காத்தல். [பெள்>பெட்டி} பெடை : பறவைகளின் பெண்பால் பெட்பு = விரும்புதற் பொருள் [பெட்டை>பெடை] பெண் : 1. மகள், 2. சிறுமி. [பெள்>பெண்] பெய்-தல்: 1. பொழிதல் 2. ஒழுகவிடுதல். புல் = துளைத்தற் கருத்து [புல்> பொள்> பொய்> பொழி> பெய்-தல்] 139