பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 வேர்ச்சொல் சுவடி பெயர்-த்தல் : 1. போக்குதல் 2. அப்புறப்படுத்துதல். பெய்> பெயர்-த்தல்.] பெரு-த்தல்: மிகுதல் [பல்> பரு பெரு-த்தல்.] பெருக்கு-தல் : 1. விரியச் செய்தல், 2. நீர் நிரம்பச் செய்தல். பெரு பெருகு பெருக்கு-தல்] பெருமை: 1.பருமை, 2. மாட்சிமை. பல் = பருத்தற் கருத்து [பல் > பரு> பெரு பெருமை/ பேச்சு : 1. பேசுகை, 2. மொழி. [பெய்> பேசு>பேச்சு.] பேடி : 1. பெண் தன்மை மிகுந்த அலி, 2. ஆண்மையின்மை. பெள்> பேடு பேடி] பேணு-தல் : 1. மதித்தல், 2. விரும்புதல். [பெள்> பேள்>பேண் பேணு-தல்] பேத்தல்: பிதற்று மொழி பிதற்று> பேத்து>பேத்தல். பேய் : அச்சுறுத்தும் ஆவி பே = அச்சம் [பே பேய்.] பொக்கு: 1. உள்ளீடு அற்ற தவசம், 2. மரப்பொந்து. பொல் = வெறுமை பொல்> பொக்கு} பொங்கல் : பொங்குகை பொங்கு = பருத்தற் கருத்து பொங்கு> பொங்கல்] பொசி-த்தல்: உட்கொள்ளுதல் புல் = துளைத்தற் கருத்து [புல்>புசி> பொசி-த்தல்.]