பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 வேர்ச்சொல் சுவடி அருகன்: தோழன் [அருகு>அருகன்= உடனிருப்பவன், கூட்டாளி] அருகு: அண்மை அல்லுதல் = பொருந்துதல், நெருங்குதல் [அல்>அர்>அரு> அருவு அருகு] அருந்து-தல் : உண்ணுதல் ஆர்தல்=உண்ணுதல் [ அர்> அரு > அருந்து-தல்.] அருப்பம் : 1. நெற்கதிர்க் கரு, 2. முதலில் முளைக்கும் மீசை. அரும்புதல் = புதிதாய்த் தோன்றுதல் [அரும்பு>அருப்பு அருப்பம்.] அரும்பு: மொட்டு உருத்தல்=தோன்றுதல் [உரு>அரு> அரும்பு) அருமை : 1. சிறுமை, 2. பெருமை, 3. மேன்மை, 4. சிறப்பு. அரு = அருமையான, கிடைத்தற்கரிய [அரு> அருமை 'மை' பண். பெ.ஈறு.) அருவி: மலையினின்று அறுத்து விழும் நீர்வீழ்ச்சி அருவுதல் = அறுத்தொழுகுதல் (அருவு>அருவி] அருள்(ளு)-தல் : 1. அளித்தல், 2. அருளோடு சொல்லுதல். அல்லுதல் = பொருந்துதல், உளமொத்தல் [அல்>அள்>அர்>அருள்(ளு)-தல்.]