பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அரை-த்தல் : தேய்த்தல், மாவாக்குதல். அர் = அராவு = தேய்த்தல் [அர்>அரைதல் >அரை-த்தல்.] அரை : இடை, இடுப்பு. அருகுதல் = சிறுத்தல், குறைத்தல் [அரு>அருகு. அரு> அரை=உடம்பின் சிறுத்த அல்லது ஒடுங்கிய பாகம்.] அரையன் : அரசன் [அரசன்>அரைசன். அரையன்] அல் : கதிரவன், வெயில். உல் = வெப்பக் கருத்து வேர் [உல்>எல் = கதிரவன், வெயில் எல்>அல்.] அல்கு-தல்: சேர்தல் ஒல்லுதல் = பொருந்துதல் [ஒல்>அல்>அல்கு-தல்.] அல்லது: 1. தவிர, 2. அல்லாவிட்டால். அல் = அல்லாத, மாறான [அல்>அல்லது.] அல்லல் : துன்பம் அல்லுதல் = வருந்துதல், துன்புறுதல் [அல்>அல்லல். 'அல்' தொ.பெ.ஈறு] அல்லா-தல் : துன்புறுத்தல் அல்லுதல் = துன்புறுதல், வருந்துதல் [அல்>அல்லா-தல்] அல்லாப்பு: வருத்தம் அல்லா-த்தல் = துன்புறுதல் [அல்லா>அல்லாப்பு. 'பு' தொ.பெ.ஈறு] 17