பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 அல்லி இரவில் மலரும் ஆம்பல் அல் = இரவுப் பொழுது [அல்>அல்லி.] அலகு : கூர்மை, பறவைகளின் மூக்கு. அஃகுதல் = சுருங்குதல், கூராதல் [அஃகு>அல்கு>அலகு.] அலகை: பேய் அல் = இருள், கருநிறம் [அல் > (அல்கு) அலகை = கருநிறமான பேய்] அலசு-தல் : அசைத்து அல்லது கசக்கிக் கழுவுதல் அலைதல் = அசைதல் [அல்>அலை>அலைசு அலசு-தல்.] அலட்டு-தல் : 1. பிதற்றுதல், 2. தற்பெருமை பேசுதல். அலர்தல் = விரித்தல் [அலர்> அலறு> அலற்று>அலட்டு-தல்.] அலம்பு-தல் : 1. அலைத்தல், 2. கழுவுதல். அலைசுதல் = ஆடையைக் கசக்கிக் கழுவுதல் [அல்>அலை>அலைம்பு அலம்பு-தல்] அலமரல் : 1. மனச்சுழற்சி, 2. துயரம். உலம் = துன்பத்தால் தலைசுற்றல் (உலம்வரல்>அலமரல் ] அலர்-தல்: 1. மலர்தல், 2. பூவிரிதல். [மலர்> அலர்-தல் அலவன்: 1. நண்டு, 2.கடகவோரை அலம் = கொடுக்கு [அலம்>அலவு> அலவன் = குறடு போன்ற முன்னங்கால்களையுடைய நண்டு) வேர்ச்சொல் சுவடி