பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அலறு-தல் : அச்சத்தால், துன்பத்தால் கத்துதல். அலம் = துன்பம் [அல்>அலம்>அலர் = அலறு-தல்.] அலுங்கு-தல் : சிறிது அசைதல் அலுத்தல் = அசைதல் [அல்>அலு>அலுங்கு-தல்.] அலுப்பு : 1. சோர்வு, 2. தளர்வு. அலுத்தல் = தளர்தல் [அல்>அலு>அலுப்பு] அலுவல் : வேலை அலுத்தல் = களைத்தல் [அல்>அலு>அலுவல்= களைக்குமளவு உழைக்கும் வேலை] அலை: அசையும் நீர்த்திரை அல்லுதல் = இயங்கிக் கொண்டிருத்தல் [அல்>அலை.] அலைப்பு : 1. அசைக்கை, 2. வருத்தம். அலைதல் = அசைதல் [அலை> அலைப்பு} அலைவன் : பூனை )= அல் = இரவு [அல்>அலவன்>அலைவன் = இரவில் இரைதேடி இயங்கவல்ல பூனை] அவ்வை: 1. தாய், 2. பாட்டி. [அம்மை> அவ்வை.] அவம்: 1. கேடு, 2. பயனின்மை. அவிதல் = அழிதல், கெடுதல் [அவி> அவம் 'அம்' தொ.பெ.ஈறு ] 19