பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 அவரை: தட்டையான ஒருவகைக் காய் அம்முதல் = பள்ளமாதல், தட்டையாதல் [அம்>அமல்>அவல்>அவலை>அவரை] அவர்: பலர்பால் சேய்மைச் சுட்டுப் பெயர் [அ (சே.சு.)> அவர். 'அர்' ப.பாஈறு 'வ்' உடம்படுமெய்.] அவல் : தட்டையாக்கப்பட்ட நெல்லரிசி அம்முதல் = அமுக்குதல் [அம்>அமல்>அவல்) அவலம் : 1. துன்பம், 2. வலிமையின்மை. வலம் = வலிமை [அ + வலம்.] அவா: ஆசை கவ்வுதல் = வாயாற் பற்றுதல் அவ்வுதல் = மனத்தாற் பற்றுதல் [கவ்(வு)>அவ்(வு)>அவா] அவி-தல்: 1. வேதல், 2.வெப்பத்தாற் புழுங்குதல். உல் = எரிதற் கருத்து வேர் அகைதல்=எரிதல் [உல்>அள்>அழு>அகு>(அகை)>அகி>அவி-தல்.] அவிர்-தல்: 1. கிழிதல், 2. பீறுதல். அவிழ்தல் = விரிதல், பீறுண்ணல் [அவிழ்>அவிர்-தல்.] அவிழ்-தல்: நெகிழ்தல், இளகுதல். அவிதல் = அவிந்து விரிதல் [அவி>அவிழ் - தல்.] அவை: மாந்தர் கூட்டம் அமைதல் = கூடுதல், நிறைதல் அமை = கூட்டம் [அமை>அவை] வேர்ச்சொல் சுவடி