பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அழல்: நெருப்பு உல் = வெப்பப் பொருள் [உல்>உள்>அள்>அனல்>அழல்] அழி-தல்: 1. சிதைதல், 2. கெடுதல். [ஒழி>அழி-தல்] அழி-த்தல் : 1. சிதைத்தல், 2. கெடுத்தல். [ஒழி>அழி-த்தல்.] அழு-தல் : மனம் வருந்திக் கண்ணீர் விடுதல் அழிதல் = மனம் நோதல் [அழி>அழு-தல்.] அழுக்காறு: பொறாமை அழுங்குதல் = பொறாமையால் வருந்துதல் [அழுங்கு>அழுக்கு> அழுக்குறு>அழுக்கறு> அழுக்காறு.] அழுக்கு: மாசு அழுங்குதல் = மாசுறுதல் [அழுங்கு>அழுக்கு(தொ.பெ, தொ.ஆகு)} அழுங்கு: வளைக்குள் வதிந்து இரவில் கரையான்களைத் தின்று வாழும் சிறு விலங்கு. நளுங்கு = ஒரு விலங்கு (நளுங்கு>அளுங்கு அழுங்கு] அழுத்தம்: 1. அமுக்கம், 2. நெருக்கம். அம்முதல் = அமுக்குதல் [அம்>(அமில்)>அமிழ்>ஆழ்>(அழு)> அழுந்து>அழுத்து>அழுத்தம்.] 21