பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 அழுவம்: 1. ஆழம், 2. கடல். (ஆழ்>(ஆழ்வு)>ஆழ்வம்>அழுவம்.] அள்ளல் : 1. நெருக்கம், 2. சேறு. அள்ளுதல் = செறிதல் [அள்>அள்ளல்] அள்ளு : விலாவெலும்பு அள் = பக்கம் (பக்கவாட்டில்) [அள்>அள்ளு] அளகம் சுருள்முடி அலம் = வளைவு, சுழற்சி [அலம்>அலவு அலகு அலகம்>அளகம்.] அள-த்தல் : அளவிடுதல் அள்ளுதல் = பொருந்துதல் [அள்>அள-த்தல்=ஒன்றை இன்னொன்றொடு பொருத்தி அளத்தல் அல்லது அறிதல்.] அளபு : அளவு [அளவு >அளபு] அளம்: உப்புச் செறிந்த நெய்தல் நிலம் அள் = செறிவு [அள்>அளம்.] அளவு : நால்வகை அளவுகளுள் ஒன்று அளத்தல் = பொருத்தி அளத்தல் அள்ளுதல் = பொருந்துதல் வேர்ச்சொல் சுவடி [அள> அளவு = பொருந்தி அல்லது பொருத்தி அளத்தல்.] அளறு : குழம்பிய சேறு அள்ளுதல் = செறிதல், குழம்புதல் [அள்>அளர்>அளறு = குழை சேறு