பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அளாவு-தல் : பொருந்துதல் [அள்>அள>அளவு>அளாவு-தல்.] அளி: அன்பு அள்ளுதல் = பொருந்துதல் [அள்>அளி = அன்பு செய்தல்) அளை : 1. புற்று, 2. குகை, 3. பொந்து. உல் = வளைதற் கருத்துவேர் [உல்>உள்>அள்>அளை] அற்றம் : 1. நீங்குகை, 2. விலகுகை. அறுதல் = நீங்குதல் [அறு அற்றம். 'அம்' தொ.பெ. ஈறு அறம்: 1. நல்வினை, 2. அன்பு கொண்டு செய்யும் நல்வினை. அல்லுதல் = உளம் பொருந்துதல், அன்பு செய்தல் [அல்>அலம்>அதம்> அறம். ஒநோ. மதம் மறம்.] அறி-தல்: ஐம்புலனால் உணர்தல் அள்ளுதல் = பொருந்தியறிதல் [அள்>அளு>அறு>அறி-தல் அறிஞன் : அறிவுடையோன் [அறி>அறியுநன் > அறிநன்>அறிஞன்) அறிவு : பொறியுணர்வு [அறி> அறிவு] அறு-தல் 1. நீங்குதல், 2. பிரிதல், 3. நீங்குடல். அர் = நீங்கற் கருத்து வேர் [அர்>அறு-தல்.] 23