பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 வேர்ச்சொல் சுவடி அறுகு: அறுத்து மருந்தாகப் பயன்படுத்தும் புல்வகை. அறுத்தல் = வெட்டு (அறு>அறுகு.] அறுவடை : கதிரறுப்பு [அறு+அடை (சொல்லாக்க ஈறு)] அறை-தல் : 1. அடித்தல், 2. துண்டித்தல். அர் = அறுத்தற் கருத்து வேர் [அர்> அறு> அறை-தல்.] அறை-தல்: 1. அடித்தல், 2. துண்டித்தல். [அறு>அறை - தல்] அறை : 1. அரங்கு, 2. வீட்டின் தடுத்த பகுதி. அர் = அறுத்தல், பிரித்தற் பொருள் [அர்>அறை.] அன்பு: உள்ளம் ஒன்றிப்பொருந்தும் பற்று. ஒல் = பொருந்தற் கருத்து வேர் [ஒல்>அல்.] [அல்பு>அன்பு. 'பு' பண்புப்பெயர் ஈறு] அன்றில்: ஒன்று அன்றி ஒன்று இல்லாது என இணையுடன் இணைந்தே வாழும் பறவை. [அல்>அன்றி (கு.வி.எ.)+இல்.] அன்னை: 1. தாய், 2. தமக்கை. [அம்மை>அன்னை] அனல் : 1. தீ, 2. வெப்பம். உல் = வெப்பப் பொருள் [உல்>அல்>அன்>அனல் அனுக்கம் : அசைவு [அலுங்கு>அனுங்கு> அனுக்கு > அனுக்கம். 'அம்' தொ.பெஈறு]